Reading Time: < 1 minute

கனடாவின் மனித்தோபாவில் புத்தண்டுக்கு முந்தைய இரவு இளம்பெண் ஒருவர் மாயமானார்.

மனித்தோபாவிலுள்ள Flin Flon என்ற நகரைச் சேர்ந்தவர் Kara Fosseneuve (27). புத்தாண்டுக்கு முந்தைய இரவு வீட்டைவிட்டு வெளியேறிய Kara, நடந்தே எங்கோ சென்றுள்ளார். அவர் தனது மொபைல் போனையும் எடுத்துச் செல்லவில்லை.

இந்நிலையில், Kara சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Karaவின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக உடற்கூறு செய்யப்பட உள்ள நிலையில், அவரது மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.