கனடாவில் புதிய கோவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் திரிபுகளில் ஒன்றான அமிக்ரான் திரிபின் உப திரிபான BA.2.75 என்னும் உப திரிபு ஒன்று குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகை உப திரிபு இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உபதிரிபானது அவுஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியா அமெரிக்கா போன்ற பத்து நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் வரையில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய உபத்திரிபானது தடுப்பூசிகளை தாண்டி நோய் தொற்றை அதிகரிக்கக் கூடியது எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இந்த வகை உப திரிபினால் கூடுதல் ஆபத்து ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வகை உப திரிவினால் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.