கனடாவின் டொரன்டோ நகரத்தில் இயங்கி வரும் சில மளிகை கடைகள் பியர் மற்றும் வைன் வகைகள் விற்பனை செய்வதனை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.
பியர் மற்றும் வைன் வகைகள் அதிகளவில் களவாடப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த பொருட்களுக்கான லாப வீதம் மிகவும் குறைவானது என மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்களுக்கு பெரிய நன்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
சில மளிகை கடைகளில் ஏற்கனவே பியர் மற்றும் வைன் வகைகள் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒன்றாறியோவில் மளிகை கடைகளில் பியர் மற்றும் பயன் வகைகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பியர் மற்றும் வைன் விற்பனை செய்வதன் மூலம் 2.2 வீத லாபமே தமக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.