கனடாவில் பாரிய வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீல் பிராந்திய பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் மேலும் 10 பேரை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 322 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
களவாடப்பட்ட 369 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
சுமார் 33.2 மில்லியன் டொலர் பெறுமதியான களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.