கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப உள்ள நிலையில் நோய் தொற்றுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தட்டம்மை இருமல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளினால் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நோய்களிலிருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கனடாவிலும், உலகம் முழுவதிலும் தற்பொழுது தட்டம்மை போன்ற நோய்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவது முக்கியமானது என கனடிய பொதுசுகாதார அதிகாரி டாக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
உங்களது பிள்ளைகள் அனைத்து விதமான தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர் என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நியூ பிரவுன்ஸ்விக் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சிறுவர்கள் இருமல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.