கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இரண்டாவது தடவையாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள யூத மகளிர் பாடசாலை ஒன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதற்கு முன்னரும் ஒரு தடவை குறித்த பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் பாடசாலை மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலையில் எவரும் இருக்கவில்லை எனவும் இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காணொளிகளின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் இதுவரையில் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்திய சந்தேகம் நபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
யூத மத எதிர்ப்பு விழிப்புணர்வு சந்தர்ப்பமாக இந்த தாக்குதல் சம்பவத்தை கருதுவதாக மா நகர மேயர் ஒலிவியா சொள தெரிவித்துள்ளார்.