கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கௌரவிக்கும் வகையில் தபால் முத்திரை வெளியிடப்பட உள்ளது.
கனடாவின் முதல் பழங்குடியின முதல்வர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட நெல்லி கோர்னேய்க்கு இவ்வாறு தபால் முத்திரை வெளியிடப்பட உள்ளது.
கனடாவின் வடமேற்கு மாகாணத்தின் முதல்வராக கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையில் கோர்னேய் பதவி வகித்துள்ளார்.
பழங்குடியின சமூகத்தின் சுய நிர்ணய உரிமைகளுக்காக கோர்னேய் போராடியதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
தொழில் நேர்மை, தொலைநோக்குப் பார்வை போன்ற நற்பண்புகளுடன் பழங்குடியின சமூகத்தை சரியான பாதையில் கோர்னேய் வழிநடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய தபால் திணைக்களம் மூன்று பழங்குடியினத் தலைவர்களின் புகைப்படங்களைக் கொண்ட தபால் முத்திரைகளை வெளியிடத் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 21ம் திகதி இந்த முத்திரைகள் வெளியிடப்பட உள்ளன.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் பழங்குடியினத் தலைவர் ஜோர்க் மெனுவல் மற்றும் அல்பர்ட்டாவின் பழங்குடியினத் தலைவர் தெல்மா காலிபோக்ஸ் ஆகியோரின் புகைப்படங்களும் தபால் முத்திரையாக வெளியிடப்பட உள்ளன.