Reading Time: < 1 minute

கனடாவில் பணியிடங்களில் ஆண்கள் துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

30 வீதமான ஆண் பணியாளர்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

தொழில்களில் ஈடுபட்டு வரும் 50 வீதமான பெண்கள் பாலியல் அல்லது வேறும் வகையில் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில் இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் ஒடுக்குமுறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோரினால் பெண் பணியாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.