Reading Time: < 1 minute

கனடாவின் றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஸ்யாவிற்கு சொந்தமான பாரிய சரக்கு விமானமொன்று பியர்சன் விமானத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷியாமல் அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை சந்தித்திருந்தார்.

இந்த விமானத்தை சுவீகரித்து உக்ரைனின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என பிரதமர் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.

AN-124 என்ற ரஸ்ய சரக்கு கப்பலை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

றொரன்டோவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த விமான வொல்கா நிப்பர் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் அந்த நிறுவனம் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஓராண்டு காலமாக கனடாவில் தரித்து நிற்பதனால் இந்த விமான நிறுவனம் பெருந்தொகை கட்டணத்தை கனடாவிற்கு செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.