Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நாய் ஒன்றை கொலை செய்தவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயதான ஒன்றாரியோ பிரஜை ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாயின் கழுத்தை நெரித்து இந்த நபர் கொலை செய்துள்ளார். ஆரம்பத்தில் நாயை காணவில்லை என கூறியிருந்தார், பின்னர் தாம் நாயை கொன்றதாக விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நாயை பலரை கடித்ததாகவும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நாயை கருணை கொலை செய்வதற்கு செலுத்த போதியளவு பணம் இருக்கவில்லை எனவும், நாய்கள் காப்பகங்களும் நாயை பொறுப்பேற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் நாயை கொன்றதாக தெரிவித்துள்ளார். குற்றச் செயலை ஒப்புக்கொண்ட காரணத்தினால் குறித்த நபருக்கு நீதிமன்றம் குறைந்தளவு தண்டனை விதித்துள்ளது.

இதன்படி குறித்த நபரை மூன்று மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன், வாழ் நாளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.