Reading Time: < 1 minute

கனடாவில் நகையகமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுத்தியல்களைக் கொண்டு நகையகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணொளிகள் மூலம் கொள்ளை முயற்சி மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் பத்து பேர் வரையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.