Reading Time: < 1 minute

கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான ரொஜர்ஸ், பெல் மற்றும் டெலோஸ் ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனங்கள் திடீரென கட்டண அதிகரிப்பை மேற்கொண்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தங்களது மாதாந்த இணையம், தொலைக்காட்சி மற்றும் வீட்டு தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் எதிர்பாராத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரதான சேவை வழங்கும் நிறுவனங்களினால் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இந்த கட்டண அதிக அதிகரிப்பு குறித்து தங்களது கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளனர்.