கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் ஹோகான்கன் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கார்பந்தய நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளது.
மோட்டார் கார்களை பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்டபோது அதில் ஓர் கார் வேகமாக சென்று மதில் சுவர்களில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காரின் சாரதியும் அவருடன் சென்ற மற்றொருவரும் காயம் அடைந்து உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் வகையிலான பின்னணிகள் எதுவும் கிடையாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவரில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் மோட்டார் கார்பந்தய சமூகத்தை பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.