Reading Time: < 1 minute
கனடாவில், பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு அமைப்பான சமிடோன் என்ற அமைப்பு தீவிரவாத அமைப்பாக கனடா பட்டியலிட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் சமிடோன் அமைப்பினை தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளன.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிளொன்க் இது தொடர்பாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
சமிடோன் என்ற அமைப்பு பலஸ்தீன சிறை கைதிகளுக்கு உதவும் ஓர் வலையமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கனடாவில் மற்றும் ஒரு பாலஸ்தீன விடுதலை முன்னணி என்ற அமைப்பும் ஏற்கனவே தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.