Reading Time: < 1 minute

கனடாவில் திரையரங்குகளில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள யோர்க் வட்டாரப் பகுதிகள் மற்றும் டொரண்டோவில் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து இவ்வாறு பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாத நபர்களின் கைவரிசை
இனந்தெரியாத நபர்கள், மர்ம பொருளைப் பார்வையாளர்கள் மீது தெளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

வாகன் (Vaughan) நகரத்தில் உள்ள திரையரங்கில் அப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்திருந்த இருவர், இனம் காணப்படாத, எரிச்சலடையச் செய்யும் பொருள் ஒன்றை காற்றில் தெளித்துள்ளனர். அந்த அரங்கில் 200 பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பலர், தெளிக்கப்பட்ட பொருளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில்
ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இது நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம் இன்னும் இரண்டு திரையரங்கங்களிலும் நடந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா வெறுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.