திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு 73 ஆண்டுகளின் பின்னர் தம்பதியினர் பிரிந்து வாழ நேரிட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் கெவன் தம்பதியினரே இவ்வாறு சூழ்நிலை காரணமாக 19 மாதங்கள் பிரிந்து வாழ நேரிட்டுள்ளது.
இந்த இருவரும் தனித் தனியான பராமரிப்பு மையங்களில் வாழ நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தம்பதியினரின் பிள்ளைகள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
73 ஆண்டு கால திருமண பந்தத்தின் பின்னர் இருவரும் பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை பெரும் துரயமான நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
தமது தந்தைக்கு 95 வயது எனவும், தாய்க்கு 92 வயது எனவும் இந்த தம்பதியினரின் பிள்ளைகள் குறிப்பிடுகின்றனர்.
வயதான காலத்தில் இருவரும் பிரிந்து வாழ்வதானது அவர்களது உளச்சுகாதாரத்தை பெரிதாக பாதிக்கும் என பிள்ளைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த இருவரையும் ஒரே பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் நெரிசல் நிலை, வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாக இந்த இருவரும் பிரிந்து வாழ நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.