Reading Time: < 1 minute

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை வாடகைக்கு விட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மிஸ்ஸிசாகாவில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

போலி இலக்கத்தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 1.6 மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை கனடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.