Reading Time: < 1 minute
கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.