Reading Time: < 1 minute

கனடாவில் தம்ஸ்அப் இமோஜி ஒன்றினால் விவசாய நிறுவனமொன்று 82,000 டாலர்களை இலக்க நேரிட்டுள்ளது.

கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விவசாய நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் இவ்வாறு 82000 டாலர்களை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று தொடர்பில் குறித்த விவசாய நிறுவனம், இமோஜி ஒன்றை பதிலாக அனுப்பியுள்ளது. தனக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த விவசாய நிறுவனம் இமோஜியை அனுப்பி உள்ளது.

இதன் மூலம் உடன்படிக்கையை வாசித்து புரிந்து கொண்டு அதற்கு இணங்குவதாக விவசாய நிறுவனம் கூறி இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த விவசாய நிறுவனம் 82,000 டாலர்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் வட்டியை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தானியங்களை கொள்வனவு செய்யும் நிறுவனம் ஒன்றிற்கும் விவசாயிகளுக்கும் இடையில் இந்த பிணக்கு ஏற்பட்டுள்ளது.

தானியங்களை விற்பனை செய்யும் நிறுவனம் விவசாயிகளுக்கு தானிய விநியோக முறை குறித்த உடன்படிக்கை விவரங்களை அலைபேசி வழியாக அனுப்பி வைத்துள்ளது.

இந்த உடன்படிக்கை விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த விவசாய நிறுவனம் தம்ப்ஸ் அப் இமோஜியை அனுப்பி வைத்துள்ளது.

எனவே விவசாய நிறுவனம் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதனால் அதற்கான கொடுப்பனவை செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.