கனடாவில் தபால் பெட்டிகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
றொரன்டோ பெரும்பாகம் மற்றும் தென் ஒன்றாரியோ ஆகிய பகுதிகளில் இவ்வாறு தபால் பெட்டிகள் உடைக்கப்பட்டுள்ளன.
கனேடிய தபால் சேவைக்கு சொந்தமான தபால் பெட்டிகளை உடைத்து கசோலைகள், கடன் அட்டைகள், ஆள் அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
தபால் பெட்டிகளை உடைத்து களவாடிய குற்றச்சாட்டின் பேரில் றொரன்டோவைச் சேர்ந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களவாடப்பட்ட பெருந்தொகை கடிதங்கள், நிதி ஆவணங்கள், அரசாங்க அடையாள அட்டை மற்றும் களவாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் உள்ளிட்டனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆள் அடையாள ஆவணங்களை பயன்படுத்தில் பாரியளவில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.