கடனாவின் பிராம்ப்டன் நகரத்தை சேர்ந்த மதகுரு ஒருவர் பாலியல் தாக்குதல் விசாரணையில் தொடர்பு கொண்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் கூறியுள்ளனர்.
69 வயதான ஆசோக் குமார் என்பவர் திங்கள்கிழமை ஒரு வீட்டிற்கு மத நிகழ்ச்சி நடத்தச் சென்றுள்ளார் டிக பொலிஸாரின் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மதகுருவை பொலிஸார் கைது செய்து பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், குறித்த மதகுருவை அசோக் சர்மா என்ற பெயராலும் அழைப்பதாக தெரிவித்தனர்.
குறித்த நபர் பல ஆண்டுகளாக பிரம்டனில் மதத் தலைவராக இருந்து வருகிறார்.
சந்தேக நபரின் செயற்பாடுகளினால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் உடையோர் 905-453-2121 எக்ஸ்டென்ஷன் 3460 என்ற எண்ணிற்கு அல்லது 1-800-222-TIPS (8477) என்ற குற்றம் எதிர்ப்பு உதவி பிரிவுடன் தொடர்பு கொள்ளலாம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.