Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த ஜனவரி மாதம் 2 இலட்சத்து 13ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் எதிர்பார்க்கப்பட்ட வேலை இழப்பில் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்வாக காணப்படுகின்றது.

சில்லறை வியாபாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை முதல் அனைத்து வணிக செயற்பாடுகளுமன்ற நிலையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் இந்த வேலை இழப்புபானது 0.6சதவீதம் அதிகரித்து 9.4சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அத்துடன் கொரோனா நெருக்கடியில் நிரந்தரமற்ற சூழலில் 5 இலட்சத்து 29ஆயிரம் பேர் தங்களது வேலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.