Reading Time: < 1 minute

கனடாவில் அனைத்து வகையான செய்திகள், செய்தி வீடியோக்கள் என்பனவற்றை முடக்குவதாக மெட்டா அறிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் இந்த முடக்கம் அமுல்படுத்தப்பட உள்ளது.

புதிய சட்டத்திற்கு பதிலடி
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் இவ்வாறு செய்திகள் முடக்கப்பட உள்ளன.செய்திகள் முடக்கப்பட உள்ளன.

கனடிய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டத்திற்கு பதிலடியாக மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கணக்குகளை பேணும் கனடிய பயனர்களினால் இனி வரும் காலங்களில் செய்தி கட்டுரைகள் காணொளிகளை பார்வையிட முடியாது.

செய்திகளை பார்வையிடும் வசதி நிரந்தரமாக முடக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.