Reading Time: < 1 minute

கடனாவில் சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ் தொற்று நோய்க்கு புதிய மருந்து அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய புதிய மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய வகை பிறபொருளெதிரி மருந்து வகையொன்றுக்கு கனடிய சுகாதார திணைக்களம் இவ்வாறு அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பெய்பொர்டுஸ் எனப்படும் இந்த மருந்து வகைக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகுpன்றது.

அஸ்ட்ராசென்கா மற்றும் சானோபி ஆகிய இரண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த மருந்தினை உற்பத்தி செய்துள்ளன.

பிறந்த சிசுக்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு சுவாசப்பையில் ஏற்படக் கூடிய பாரதூரமான நோய்களுக்கு இந்த மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஊசி மருந்தாக இந்த வகை மருந்து வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.