கனடாவில் சில்லறை வியாபாரத்தில் சாதக மாற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை வியாபாரம் 0.7 வீதமாக அதிகரித்துள்ளது. இலத்திரனியல் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், செப்டம்பர் மாதத்தில் சில்லறை விற்பனையானது 0.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை ஏற்றம் என்பனவற்றினால் கனேடியர்கள் பொருட் கொள்வனவின் போது அதன் தாக்கத்தை நேரடியாக உணர நேரிட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக மக்கள் கொள்வனவின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களிலும் வாடிக்கையாளர்கள் பொருட் கொள்வனவின் போது சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.