கனடாவில் சிறுவர்களை பயன்படுத்தி மோசடி இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
டாக்ஸி கட்டண செலுத்துகை தொடர்பில் உதவி கோரும் போர்வையில் இவ்வாறு மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் சிறுமியர் அருகாமையில் இருப்பவர்களிடம் சென்று டாக்ஸி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கோரி தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு உதவ முன்வருவோரிடம், அவர்களது டெபிட் அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அட்டைக் கொடுப்னவு மூலம் இவ்வாறு உதவும் நபர்கள் பணத்தை இழக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்ஸி கட்டணமான சிறு தொகையை செலுத்துவதற்காக உதவி கோரும் போர்வையில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சில சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்களுக்காக பரிதாபப்பட்டு உதவி செய்யும் போதும் அந்த உதவியை சிலர் துஷ்பிரயோகம் செய்து லாபமீட்டிக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குயில்ப் பகுதியில், இவ்வாறு சிறுவர்களுக்காக பணம் செலுத்திய சிலர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த விவகாரம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளை இனத்தைச் சேர்ந்த 11 முதல் 14 வயதான சிறுவர் சிறுமியர் இந்த மோசடிக்காக பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.