கனடாவில் சிறுவர் நலன்புரி கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை வழங்கப்பட உள்ள சிறுவர் நலன்புரி கொடுப்பனவுத் தொகை உறுதி அளிக்கப்பட்டதனை விடவும் அதிக தொகை என தெரிவிக்கப்படுகிறது.
ஆறு வயதுக்கு குறைந்த ஒரு பிள்ளைக்கு 7437 டாலர்கள் வழங்கப்பட்டதுடன் ஆறு முதல் 17 வயது வரையிலான பிள்ளைக்கு 6275 டாலர்கள் வழங்கப்பட்டது.
2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான கொடுப்பனவு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர் நலன்புரித் திட்டத்தின் ஊடாக குடும்பங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு தொகை 648.9 டொலர்கள் எனவும், ஆறு முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுத் தொகை 547.5 டாலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் சுமார் 350 டாலர்கள் கூடுதலாக பெற்றோர் பெற்றுக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது கொடுப்பனவு தொகையில் 4.7 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பண வீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த நலன்புரி கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனடிய சமூக அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை பெற்றுக் கொள்ளும் குடும்பத்தினர் பிள்ளைகளை வளர்ப்பதில் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.