Reading Time: < 1 minute
கனேடிய நகரமொன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
சனிக்கிழமையன்று, ஒன்ராறியோவிலுள்ள Dryden என்ற இடத்திலிருந்து Marathon என்ற நகரம் நோக்கிப் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்றில் நான்கு பேர் பயணம் செய்துள்ளார்கள்.
அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் தனது இலக்கைச் சென்றடையாததையடுத்து, உடனடியாக பொலிசார் மீட்புக்குழுவினருடன் அந்த விமானத்தைத் தேடிச் சென்ற நிலையில், Sioux Lookout என்ற இடத்துக்கு தென்கிழக்கே அந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது தெரியவந்தது.
அந்த விமானத்தில் பயணித்த நான்கு பேருமே உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் இருவரது உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.