கனடாவில் இரண்டு ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளார்கள்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் ட்ரக் ஒன்றின் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்.
ஒன்ராறியோவுக்கு அருகே நவி ட்ரக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, அவரது ட்ரக், எதிரே வந்த மற்றொரு ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு ட்ரக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில், நவியும், மற்ற ட்ரக்கில் இருந்த அர்ஷ்தீப் சிங்கும், அவருடன் பயணித்த மற்றொரு நபரும் என மூன்று பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
அர்ஷ்தீப் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
உயிரிழந்த அந்த மூன்றாவது நபர் முறைப்படி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவர்களுடைய குடும்பத்தினர் இந்திய அரசைக் கோரியுள்ளனர்.