Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை செயற்பாடுகள் மனித உரிமை மீறல் வகையீட்டுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குற்பிட்ட சாதி ஒன்றை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவது மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் பாடசாலை சபை சாதி ஒடுக்குமுறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் ஸ்காப்றோ பாடசாலை சபையின் பொறுப்பாளர் யாழினி ராஜகுலசிங்கம், சாதி ஒடுக்குமுறை குறித்து முதன்முதலில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாடசாலை சபைகளில் சாதி ஒடுக்குமுறை குறித்த விடயம் பற்றி சுட்டிக்கப்பட்டதுடன் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவிலும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாதி ஒடுக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.