Reading Time: < 1 minute

கனடிய மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனடிய மத்திய அரசாங்க ஊழியர்களின் ஒரு மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்படும் என லிபரல் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

இதன் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் 65 சதங்களினால் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் மத்திய அரசாங்கப் ஊழியர் ஒருவரின் மணித்தியாலம் ஒன்றுக்கான சம்பளம் 17.30 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தினை சீராக்கும் நோக்கில் இவ்வாறு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்களது சம்பளங்கள் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை விடவும் மாகாண சம்பள நிர்ணயம் அதிகாமாகா பட்சத்தில் இந்த சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.