Reading Time: < 1 minute

கனடாவில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு சனத்தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 70 ஆண்டுகளில் அதிகபட்சமாக தற்பொழுது நாட்டில் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ம் ஆண்டு ஜுலை மாதம் வரையிலான காலப் பகுதியில் நாட்டின் சனத் தொகையானது 1.15 மில்லியனினால் உயர்வடைந்துள்ளது.

ஜீ7 நாடுகளின் வரிசையில் கனடாவிலேயே அதிகளவு சனத்தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளது. கனடாவின் சனத்தொகை வளர்ச்சியானது 2.9 வீதமாக பதிவாகியுள்ளது.

இது 1957ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான அதிகளவு சனத்தொகை வளர்ச்சியாக கருதப்படுகின்றது. இந்த சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினால் அதிகளவான பங்களிப்பு குடிப்பெயர்வின் மூலமானது என தெரிவிக்கப்படுகின்றது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் அதிகளவான சனத்தொகை வளர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.