பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக படுகொலை சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் 156வது தெருவில் 112வது அவென்யூ அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பிலேயே மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய குடியிருப்பில் பாடசாலைக்கு பிறகான கல்வி பயிற்சி மையம் செயல்பட்டு வந்துள்ளது. மட்டுமின்றி, அப்பகுதியில் அந்த குடும்பத்தினர் அறியப்படும் நபர்களாகவும் இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது தெரியவில்ல என குறிப்பிட்டுள்ள ஒருவர், இச்சம்பவம் எஞ்சிய அப்பகுதி மக்களுக்கு ஒரு பாடமாக கூட இருக்கலாம் என்றார்.
இந்த இறந்தவர்கள் தொடர்பில் பொலிசார் தகவல் எதையும் வெளியிடாததுடன், முதற்கட்ட விசாரணை முடிவுக்கு வரவில்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.