Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 68ஆயிரத்து 106பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 361பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 785பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 97ஆயிரத்து 960பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.