Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா பகுதியின் கான்டனாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கான்டனாவில் (Kanata) அமைந்துள்ள கோல்ப் திடல் ஒன்றின் இருந்த இருவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான நிலையில் இந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட கடுமையான மழை, காற்று காரணமாக அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இடி முழக்கம் கேட்டால் முடிந்த அளவு சீக்கிரம் ஏதேனும் ஒரு இடத்தில் அடைக்கலம் பெற்றுக் கொள்ளுமாறும், சத்தம் கேட்டு 30 நிமிடங்களுக்கு வெளியே வர வேண்டாம் எனவும அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக திறந்த வெளியில் இருப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.