Reading Time: < 1 minute

கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை மேலும் 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 224 குணமடைந்துள்ளதுடன் 90 ஆயிரத்து 76 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கனேடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.