Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அங்கு கியூபெக் மாநிலத்திலேயே இதுவரை அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்கு இதுவரை 77,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 5,867 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு ஒன்ராறியோவில் 53,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,968 பேர் உயிரிழந்துள்ளனர். ஆல்பேர்ட்டாவில் 18,357 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 9,381 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.