Reading Time: < 1 minute

கனடாவில் கொடுப்பனவு அட்டை இயந்திர பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் போன்றவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கொடுப்பனவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்தும் இயந்திரங்களின் ஊடாக பணம் களவாடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு அட்டை இயந்திரங்கள் களவாடப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் டொரன்டோவின் நிறுவனம் ஒன்றில் ஐந்து இவ்வாறான இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குழுவாக வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்து பணியாளர்களை திசை திருப்பி இவ்வாறு இயந்திரங்கள் களவாடப்பட்டு களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு திட்டமிட்ட குற்றச் செயலென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இயந்திரங்கள் களவாடப்பட்டு அட்டைகளினால் செய்யப்பட்ட கொடுப்பனவுகளை மீள வழங்கும் மோசடி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ரீபன்ட் ஸ்கோம் (“refund scam”) என பெயரிடப்பட்டுள்ளது பெருந்தொகை கொடுப்பினை செய்யப்பட்ட கடன் அட்டைகளை களவாடி அந்த கடன் அட்டைகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளை ரத்து செய்து மீள வரவு வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு களவாடப்பட்ட கடன் அட்டைக்கு கொடுப்பனவுகளை மீள செலுத்தியதன் பின்னர் வங்கிகளுக்குச் சென்று அங்கு பணத்தை இவர்கள் மீளப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் இவ்வாறு சுமார் 15,000 டாலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.