கனடாவில் குடும்பம் ஒன்றின் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Richlea Square Shopping Centre பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டன.
இதன்போது அதில் ஒரு கார் அங்குள்ள வெள்ளை நிற கடவையை தாண்டி நின்றுள்ளது. போக்குவரத்து விதிப்படி அதை கார் தாண்டக்கூடாது.
இதையடுத்து மற்றுமொரு காரில் இருந்த எமி ஜூ என்ற சீனப்பெண் குறித்த காரில் இருந்து இறங்கிய பெண்ணிடம், உங்கள் கார் வெள்ளை நிற கடவையை தாண்டியுள்ளது என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கோபமான குறித்த பெண், உனக்கு ஒன்றும் தெரியாது, நீ சீனாவுக்கே திரும்ப போ! உன் ஊரு அது தான் என தெரிவித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமி ஜூ என்ற சீனப்பெண் குறிப்பிட்டுள்ளார்.