கனடாவில், குடி போதையில் வாகனம் செலுத்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் திணைக்களத்தின் ஒழுக்காற்று குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மேற்பார்வை உத்தியோகத்தராக கடுமையாற்றி வந்த ரியாஸ் ஹுசைன் என்ற அதிகாரியே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து ரியாஸ் ஹுசைனுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயர் பதவி வகித்த உசைன் பதவி இறக்கப்பட்டு 12 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1200 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள மதுபான சாலையில், உசைன் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.