Reading Time: < 1 minute
கனடாவில் கார்பன் வரி அறவீடு செய்வது தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நானோஸ் ரிசர்ச் நிறுவனத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பொருத்தமற்ற நேரத்தில் கார்பன் வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த வரி அறவீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறு வரி அறவீடு செய்வதனால் காலநிலையில் தாக்கம் ஏற்படாது என பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பான்மையான மக்கள் வரி அளவீடு பொருத்தமானது என தெரிவித்துள்ளனர்.