Reading Time: < 1 minute

கனடாவின் பிராம்டன் பகுதியில் பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் இரண்டு லட்சம் டொலர்கள் வரையில் குறித்த பெண் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகம் வழியாக தொடர்பு கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து விடயங்களையும் தம்முடன் பரிமாறிக்கொண்டு நம்பிக்கையை ஏற்படுத்தி, தம்மை ஏமாற்றி பணம் பரித்துள்ளதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.

தனது மனைவி புற்றுநோயினால் உயிரிழந்து விட்டதாகவும் இரண்டு மகன்களுக்கும் சத்திர சிகிச்சை செய்வதற்காக பணம் தேவை எனக்கூறி, பணம் பெற்றுக் கொண்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

கடனாக இந்த பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் தனக்கு பணம் கிடைக்கப்பெற்றதும் அவற்றை மீள வழங்குவதாகவும் கூறி பணம் பெற்றுக் கொண்டதாக அந்த பெண் தெரிவிக்கின்றார்.

எனினும் இறுதியில் இவ்வாறு தம்மிடம் பணம் பெற்றுக் கொண்ட நபர் தம்மை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டது பின்னர் தெரியவந்தது என தெரிவித்துள்ளார்.

கனடாவில் இவ்வாறு சமூக ஊடகங்கள் வாயிலாக காதல் வலையில் சிக்கவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் தனது வாழ்நாள் சேமிப்பு தொகையான 230000 டொலர்களை இவ்வாறு குறித்த நபரிடம் இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு இவ்வாறான மோசடிகளில் கனடியர்கள் 52 மில்லியன் டொலர் பணத்தை இழந்துள்ளனர்.