Reading Time: < 1 minute
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மலை ஏறி ஒருவர் 50 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
பனி படர்ந்த காட்டுப்பகுதியில் குறித்த மலையேறி காணாமல் போயிருந்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெட் ஃபேன் கலி பூங்காவில் சேம் பெனாஸ்டிக் என்ற மலையேறி காணாமல் போயிருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தனியாக மலை ஏறுவதற்காக சென்ற நபர் 17ஆம் திகதி வீடு திரும்புவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த நபர் வீடு திரும்பாததை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்களின் முயற்சியினால் குறித்த நபர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
காட்டுப் பகுதியில் முகாமிட்டு தாம் தங்கியிருந்ததாக குறித்த மலையேறி தெரிவித்துள்ளார்.