கனடாவில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்லின் மெக்டோமர்ட் என்ற 22 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த முதலாம் தேதி தொடக்கம் குறித்த யுவதியை காணவில்லை என போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
தியான பயிற்சி ஒன்றில் ஈடுபடுவதற்காக வாகனத்தில் சென்றதாகவும், அதன் பின்னர் அவரை காணவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளம் பெண்ணை தேடுவதற்காக அவரது பெற்றோரும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது மகள் தொடர்பில் ஜாக்கிலினின் பெற்றோர் முகநூலில் உருக்கமான பதிவுகளை இட்டிருந்தனர்.
மிகவும் இரக்க குணமுடைய நேர்மையான தமது மகள் மகிழ்ச்சியுடன் நேரத்தை கழித்து வந்தார் எனவும் அன்பானவர் எனவும் பெற்றோர் முகநூலில் பதிவிட்டிருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த யுவதே சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த பெண்ணின் திடீர் மரணத்தில் சந்தேகங்கள் கிடையாது என போலீசார் ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.