கனடாவில் காட்டுத்தீ காரணமாக 10 மில்லியன் ஹெக்ரயார் காணி தீக்கிரையாகியுள்ளது.
கனடாவில் நியூ பவுண்ட்லாந்து தீவு பகுதிக்கு நிகரான அளவு காணி காட்டு தீ காரணமாக தீக்கிரையாகியுள்ளது என கனடிய காட்டு தீ நிலையம் அறிவித்துள்ளது.
கனடிய வரலாற்றில் இந்த ஆண்டில் மிக அதிகளவான காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு 7.6 ஹெக்ரயார் காணிகள் காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளது.
அதன் பின்னர் இந்த ஆண்டில் மிக அதிக அளவிலான காணிகள் காட்டு தீயினால் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுத் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் தொடர்ச்சியாக காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே காட்டுத்தீயினால் ஏற்படக்கூடிய அழிவுகள் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆண்டொன்றில் காட்டுத்தீ ஏற்படும் காலப்பகுதியில் சுமார் இரண்டு தசம் ஒரு மில்லியன் ஹெக்ராயார் காணிகள் தீக்கிரையாகும் என்ற போதிலும் இந்த ஆண்டு மிக அதிக அளவிலான அழிவுகள் பதிவாகியுள்ளன.
இதே வேலை காட்டு தீ காரணமாக இரண்டாவது தீயணைப்பு படைவீரரும் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே 19 வயதான இளம் யுவதி ஒருவர் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்திருந்தார்.
தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த யுவதி காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.