கனடாவின் டொரன்டோ பகுதியில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக 228 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த வாகனங்களின் சந்தை பெறுமதி சுமார் 60 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகன கொள்ளையுடன் தொடர்புடைய 228 பேருக்கு எதிராக மொத்தமாக 553 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. களவாடப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் அதிக பெருமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது.
வீடுகள், ஹோட்டல்கள், விமான நிலைய வாகன தரப்பிடங்கள் மற்றும் கசினோ மையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ நகரில் மட்டும் 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 9,747 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.