Reading Time: < 1 minute

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 54 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அரசாங்கம் குடிவரவு கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு தீர்மானித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறு எனினும் மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல்கலைக்கழகங்களை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை குறைப்பானது பல்கலைக்கழக கட்டமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் என கனடிய கல்லூரிகளின் ஒன்றிய தலைவர் பாரி ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பானது கல்லூரிகளுக்கான வருமானத்தை குறைக்கும் எனவும் இது பின் தங்கிய கனடிய மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் கல்வியைத் தொடர்வது குறைந்து வருவதாகவும் வேறு நாடுகள் நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.