Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழக மாநிலம் மதுரையை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி அப்பாத்துரை என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் என்.டி.பி கட்சியின் தலைமைப் பதவிக்காக அஞ்சலி போட்டியிட்டார்.

எனினும், தலைமைப் பதவியில் போட்டியிடுவதற்கான தகுதியை அஞ்சலி இழந்து விட்டதாக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கட்சியின் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் காலநிலை சார்பான அரச சார்பற்ற நிறுனமொன்றுடன் நெருங்கிச் செயற்பட்டதாக அஞ்சலி மீது கட்சித் தலைமை குற்றம் சுமத்தியுள்ளது.

தமக்கு எதிரான தீர்மானம் பிழையானது எனவும் முன்கூட்டியே எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகிச் செல்ல போவதில்லை எனவும் கட்சியில் இருந்து கொண்டே தாம் உரிமைகளுக்காக போராட உள்ளதாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமைப் பதவிக்கான தேர்தல் பிரச்சார விதிகளை அஞ்சலி அப்பாத்துரை மீறியதாக கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

கட்சி உறுப்புரிமையை அதிகரிப்பதற்காக முறையற்ற வகையில் மூன்றாம் தரப்பினருடன் அஞ்சலி தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அஞ்சலி கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஞ்சலி அப்பாத்துரை பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் வேட்பாளராக கட்சியின் சார்பரில் போட்டியிடும் திட்டத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.