கனடாவில் தற்போது ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒமிக்ரோன் திரிபு தாக்கம் காரணமாக இவ்வாறு ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதன் காரணமாகவும், தனிமைப்படுத்தலில் உள்ள காரணத்தினாலும் சேவைகளை வழங்குவதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து, மளிகைகடைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த பணியாளர்களின் பற்றாக்குறை நிலையை அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சுகாதார சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலைமை உருவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.