கனடாவில் ஓமிக்ரோன் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 24 மணிநேரத்தில் கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டதோடு 6 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரை மொத்தமாக 19 இலட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 137 பேர் மரணமடைந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரத்து 137 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 1,852 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 18 இலட்சத்து 16 ஆயிரத்து 278 பேர் குணமடைந்துள்ளனர்.